சின்னத்திரையில் காமெடி ஷோக்களில் பங்கேற்று மெல்ல, மெல்ல மக்களின் மனங்களை கவர்ந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படம் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் ஏற்ற, இறக்கங்களுடனே சினிமாவில் பயணித்து வருகிறார். எனினும், பேமிலி ஆடியன்ஸ் மற்றும் சிறுவர் ரசிகர்களை கையில் வைத்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது அந்த வரிசையில் படங்களை நடித்து வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வணிக ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் பெற்றது. இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் எஸ்.கே.20 என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ஜோடியாகவும், சூப்பர் காம்போவான சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்துக்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டு பஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கவே அறிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. இந்த நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#Prince Second look ❤️👍 pic.twitter.com/A5mJh2cAAU
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 10, 2022