மத்தியப்பிரதேசத்தின் தார் பகுதியிலுள்ள டைனோசர் தேசிய பூங்காவில், டில்லி விலங்கியல் துறை மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில், புதிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 52 கூடுகளில், ஒரு கூட்டில் 10 முட்டைகள் உள்ளன. இவற்றில், இதுவரை இல்லாத வித்தியாசமான முட்டைகளும் அடக்கம். இந்த முட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு அருகருகே வைக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் இருக்கும் முறை பறவைகளில் தான் காணப்படுமே தவிர, ஊர்வனவற்றில் இதுவரை காணப்பட்டது இல்லை. எனவே இந்த புதிய வகை முட்டைகள் கண்டுபிடிப்பு மூலம், இனி வரும் காலத்தில், டைனோசரின் இனப்பெருக்கம், கூடு கட்டும் முறை உள்ளிட்டவை குறித்து புதுவித ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும்.