திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் அரசு ஆவின் பால் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு சேகரிக்கப்பட்டு, கொண்டு வரப்படும் பால், பாக்கெட்களாக பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் மூலம் பால் பாக்கெட்கள் திருடப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 100 லிட்டர் பால் வரை திருடப்பட்டு வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக பாதி விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.