’தன்ஹாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ராவுத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். 3டி படமான ஆதிபுருஷ் ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசர் நேற்று வெளியானது. ராவணால் கடத்தப்பட்ட சீதாவை, ராமன் இலங்கைக்கு சென்று மீட்கும் கதை கிராபிக்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், படத்தின் விஎஃப்எக்ஸ்(vfx) குழந்தைகளுக்கான கார்டூன் தரத்தில் இருப்பதாக கேலியும், ரூ.500 கோடியில் உருவானதாகக் கூறப்படுவதால் அதிர்ச்சியுன் அடைந்து இணையவாசிகள் கலாய்த்து வருகிறனர். இந்த திரைபடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.