இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று முதல் (ஆகஸ்ட் 1ஆம் தேதி) தொடங்கி உள்ளது. வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலக்கத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி குறித்து ஆலோசனை நடத்தினார். திமுக, அதிமுக, பா.ஜ.க, பா.ம.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.