அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Clark என்ற இளைஞர் பிறக்கும்போதே இரு கால்களும் இல்லாமல் பிறந்துள்ளார். எனினும், உடலில் உள்ள குறைபாடு எந்தவிதத்திலும், தான் சாதிக்கும் மனபாங்கை பாதிக்காது என்று சொல்லும் படி, மன உறுதியுடன் போராடி விளையாட்டில் இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளார். அதன்படி, கடந்த 13ந் தேதி அன்று highest box jump மற்றும் diamond pushups ஆகிய விளையாட்டுகளில் சாதனை படைத்துள்ள Clark-கை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.