பக்தர்கள், தெய்வத்திடம் வைக்கும் தங்களின் நேர்த்திக்கடனுக்காக தாடி வளர்ப்பார்கள். பின்னர், பிரார்த்தனைகள் பூர்த்தியடைந்ததையடுத்து தாடி எடுப்பது வழக்கம். ஆனால், சத்தீஸ்கரில் தன்னுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை தாடி வளர்த்து, பின்னர் எடுத்துள்ளார் ஒரு வினோத மனிதர். சத்தீஸ்கர் மாநிலம் மனேந்திரகர் பகுதியில் வசித்துவரும் ஆர்டிஐ ஆர்வலரான ராம சங்கர் குப்தா, மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32ஆவது மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்துள்ளார். இதற்காக தன் கோரிக்கை நிறைவேறும் வரை தாடியை எடுக்க மாட்டேன் என்று போராட்டம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சத்தீஸ்கர் அரசு அந்த பகுதியை மாநிலத்தின் 32ஆவது மாநிலமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, ராம சங்கர் குப்தா தனது தாடியை எடுத்துள்ளார்.