சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக சிறப்பு பாதை அமைத்து தர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை இருந்தது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பை கடந்து சென்று கடலை அருகாமையில் ரசிக்கும் வகையில் சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலைப் பெற்று பணிகளை தொடங்கி 80% வரை நிறைவடைந்து உள்ளது. மரப்பலகையால் அமைக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு பாதைக்கு அருகிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறை அமைக்கவும் தற்போது சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கியுள்ளது. வரக்கூடிய நாட்களில் கழிவறை கட்டுமானப் பணிகளையும் முடித்து, டிசம்பர் மாத சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு முன்னரே சிறப்பு பாதையை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.