கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது பற்றி கூறுகையில், கேரளத்தில் குரங்கு அம்மை நோய்த் தொற்றுடன் காணப்பட்டவரின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரிய வரும். மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதுவரை, நோய் அறிகுறியுள்ளவரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.