சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் வந்த சந்தேகிக்கும் வகையில் இருந்த பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பயணி கொண்டு வந்த பையில் உயிருடன் இருந்த ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகள் இருந்துள்ளது. இதனை மீட்ட அதிகாரிகள் மீண்டும் தாய் ஏர்வேஸ்-ல் திருப்பி அனுப்பினர். உயிருடன் பாம்புகள் பையில் கொண்டு வந்த பயணியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.