சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (ஜன.30 ) சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் 24 வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சேட்டு பேசுகையில்,” மக்களின் நேரடிக் குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் அமர்வுபடியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த துணை மேயர் மகேஷ் குமார், “கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மேயர் பிரியா பேசுகையில், “அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது , அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு முறையாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.