சீன நாட்டின் யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று ஏற்கனவே இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தற்போது இலங்கை அரசு சீன உளவு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிற்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. முன்னதாக, அறிவியல் சார்ந்த எந்தவிதமான ஆராய்ச்சிகளையும் சீன உளவு கப்பலில் மேற்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டை இலங்கை அரசு விதித்தே ஹம்பாந்தோட்டாவில் யுவான் வாங்-5 நிற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.