அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணம் கூப்பர்டினோவில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஐபோன் சீரிஸ்சில் புதிய மாடல் செல்பேசியான ஐபோன்+14 வகையறாக்களை அறிமுகம் செய்தார். இதில், ப்யோனிக் சிப் ப்ராசசர், வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் ப்ரூஃப், அதிநவீன கேமரா, அட்வான்ஸ் டிஸ்பிளே, விபத்து அறிவிப்பு எமெர்ஜென்ஸி எஸ்ஓஎஸ், நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி, சேமிப்பு வசதி ஆகியவை முன்பைவிட கூடுதலாக இந்த மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஐபோன்-14-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விபத்து அறிவிப்பு எமெர்ஜென்ஸி எஸ்ஓஎஸ் என்பது கார் விபத்துக்களை கண்டறியும் சென்சார் தொழில்நுட்பம் ஆகும். இது பல சமயங்களில் ரோலர் கோஸ்டர் ரைடை கார் விபத்து என தவறான தகவல் தருவதாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து, இது ஒரு புதிய தொழில்நுட்பம் எனவும் இதை நாங்கள் மேம்படுத்துவோம் எனவும் ஆப்பிள் நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.