ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்களின் அதிரடி உத்தரவு, குண்டுவெப்புகள் என மற்ற நாடுகளை போலவே ஆப்கானிஸ்தானில் இருந்து செய்திகள் வந்தாலும், தலிபான் ஆட்சி செய்யும்போது அந்த செய்திகளை மட்டும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடிவதில்லை. பெண்கள் படிக்கத் தடை, பொதுமக்கள் கூடும் இடங்களில் அவ்வப்போது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து உயிாிழப்பு என ஆப்கானிஸ்தான் உலக அரங்கில் பதைபதைப்பையே அதிகம் ஏற்படுத்துகிறது. அதேபோல, வடக்கு மாகாணமான பரியாப்பிலில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ளது ஹஷ்டோமின் கிராமம். இந்த கிராமத்தில் முகமது நாடார் (10), அப்துல் ரஹ்மான் (11) மேலும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் கலாஷ்னிகோவ் ரகத் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக 11 வயது சிறுவன் விளையாட்டாகத் துப்பாக்கியால் சுட்டதில் 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் வெடிக்காத மோட்டார் குண்டுகள், வெடிபொருட்கள் போன்ற ஆயுதங்களால் விளையாடும் குழந்தைகள் அதிகளவு உயிரிழப்பதாலே அந்த நாட்டில் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.