பஞ்சாப் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லையான பெரோஸ்பூர் செக்டாரில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் நேற்று தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளான். இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்தில் அந்த சிறுவனை பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இந்திய வீரர்கள் நல்லெண்ண அடிப்படையில் திருப்பி ஒப்படைத்தனர். பிறகு அந்த சிறுவனை பாகிஸ்தான் ராணுவத்தினர் அவனுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.