திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவுக்காக, கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது.வருகின்ற 27ம் தேதி மண்டல பூஜை நடக்க இருக்கும் நிலையில் கோவில் நடை திறந்த நாட்களில் இருந்து இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹெலிக்காப்டர் சேவை செய்துள்ளதாக ஒரு தனியார் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை கேரள அரசு தாமாக முன்வந்து இந்த அறிவிப்பினை வாபஸ் பெற வேண்டும் என அந்நிறுவனத்திற்க்கு உத்தரவிட்டது.
கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கினை விசாரித்து , திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சம முக்கியத்துவம் வழங்க வேண்டும். எனவே இக்கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்தது. சபரிமலை கோவிலுக்கு இம்முறை மலைபாதையும் திறந்து விடப்பட்டுள்ளது. எரிமேலி, வண்டிபெரியார் மற்றும் சத்திரம் வழியாக பக்தர்கள் சன்னிதானம் செல்கிறார்கள். நேற்று வரை இந்த பாதை வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.