தென்காசி மாவட்டமான பிறகு முதன்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க்கும் அரசு விழா நாளை நடைபெறுகிறது. முதல்வர் வருகைக்காக பல்வேறுவிதமான சிறப்பு ஏற்பாடுகளை திமுக தொண்டர்கள் உற்சாகமாக செய்து வருகின்றனர்.பின்னர் அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் செல்கிறார்.
தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாடும் விழா முடிந்ததும் மீண்டும் சென்னை வந்துவிடுவார் என தகவல் வெளியிட்டுள்ளனர்.