டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி-20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ போன்றவை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஜி20-யின் தலைமையை ஏற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரட்டுகளை தெரிவிப்பதோடு, இத்தலைமைப் பொறுப்பு நம் நாட்டுக்கே பெருமை தரக்கூடையது. இதனால் ஜி-20 நாடுகள் மட்டுமல்லாது அனைத்து உலக நாடுகளாலும் இந்தியாவை கவனிக்கதக்க நாடக மாறிவருகிறது. இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழகம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழகம் உறுதுணையாக இருக்கும்.