அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்கொரியா கடல் எல்லைப்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திவருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை கடைபிடிக்காமல் இன்று வடகொரியா ராணுவம், மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.