தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ அண்மையில் வெளியானது. சமீபத்தில் அவர் தன் காதலன் சோஹேல் கதுரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் பெற்றோர்கள்,உறவினர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 2-ம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமணச் சடங்குகள் நடந்தன. முதல் நாளில் மருதாணி நிகழ்வு, இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு மணமக்கள் ஒன்றாக நடந்து வருவது போன்ற வீடியோ மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. மணமக்களுக்கு திரைபிரபலங்கள் பலரும் , ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.