மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் மூலமாக கடந்த 15 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் 4 கோடி பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் சார்பாக காணிக்கை வசூலிப்பதும், சில இடங்களில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் காசுகள் மாதமாதம் இறுதியில் எண்ணப்படும்.
2008 ம் ஆண்டு முதல் நவம்பர் 2022ம் ஆண்டு வரை சுமார் 100 கோடியே 20 லட்சத்தில் 60ஆயிரத்து 913 ரூபாய் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துப்பாண்டி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு கோயில் நிர்வாகம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.