மதுரை ஐகோர்ட்டு கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மதுரையில் நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் பணீயில் இதுவரை ஆண்களே இருந்துள்ளனர். அவர்கள் சீருடையாக வெள்ளை நிற ஆடையும், சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்து இருப்பார்கள்.
இதில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த இவர் சோப்தார் பணியில் சேர்ந்தது பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.