சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமைதி பேரணியாக சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
கழகத்தின் வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்,தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம் ,கழகத்தை இமயமாய் உயர்த்திடுவோம் என்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.