day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

11 கிராமங்களை உள்ளடக்கி சாட்டிலைட் நகரமாக மாறுகிறது : திருவள்ளூர்

11 கிராமங்களை உள்ளடக்கி சாட்டிலைட் நகரமாக மாறுகிறது : திருவள்ளூர்

தமிழக சட்டசபை கூட்டத்தின்போது தமிழகத்தில் 5 நகரங்கள் சாட்டிலைட் நகரங்களாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூரை சாட்டிலைட் நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் சாட்டிலைட் நகரம் 37.74 சதுர கிலோ மீட்டர் வரை 11 கிராமங்களை இணைத்து உருவாக்கப்படுகிறது. இதில் அரியபாக்கம், ஆத்துப்பாக்கம், வட மதுரை, சித்தரியம்பாக்கம், பலேஸ்வரம், வேலபாக்கம், ரால்லபாடி, எல்லாபுரம், பெரியபாளையம், பனப்பாக்கம், மூங்கில்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. மேலும் 11 தாலுகாக்களும் பரிசீலக்கப்பட்டு வருகின்றன. இந்த 11 தாலுகாக்களில் அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம், மதுரவாயல், பொன்னேரி, பூந்தமல்லி, திருவொற்றியூர், திருவள்ளூர், திருத்தணி, மற்றும் ஊத்துக்கோட்டை ஆகியவை அடங்கும்.

திருவள்ளூர் சாட்டிலைட் நகரமானதையொட்டி அதில் இடம்பெற்றுள்ள கிராமங்களின் அருகில் சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை இணைப்பு, ரெயில் இணைப்பு, வெள்ள பாதிப்பு தடுப்பு உள்ளிட்ட 11 வகையான வசதிகளை வழங்குவது தொடர்பா கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சாட்டிலைட் நகரத்தில் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்கள், நடைமுறையில் உள்ள பணிகளை செய்து முடிக்கும் செயல்பாடுகள், அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பற்றியும் இந்த பொருளாதார ஆய்வில் பரிசீலிக்கப்பட்டன. மப்பேட்டில் உருவாகும் மல்டி-மாதிரி தளவாட பூங்கா, சென்னை வெளிவட்ட சாலை, ஒருங்கிணைக்கப்பட்ட நடைபாதை, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை அகலப்படுத்துதல், சென்னை-பெங்களூ தொழில் வழித்தடத்தின் மேம்பாடு ஆகியவையும் இந்த சாட்டிலைட் நகர பணிகளில் அடங்கும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!