விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாக
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர்கள் மழை விடுமுறையை அறிவித்துள்ளனர்.
கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் நீலிகிரி, கோவை உள்ளிட்ட சில மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்க்கு வானம் மேகமூட்டதுடனும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.