சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சவரன் ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் விற்ற தங்கம் கடந்த 11-ந்தேதி முதல் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1 சவரன் தங்கம் ரூ.39,208-க்கு விற்றது. இன்று சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.39,520-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4901-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4940-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.