சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,560-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.440 உயர்ந்து ரூ.39,000-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,820-க்கு விற்கப்பட்டு வந்தபோது, இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,875-க்கு விற்கப்படுகிறது.