பிரபல சமூகவலைதள நிறுவனமான டுவிட்டரை எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இந்நிலையில், அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். உலகம் முழுவதும் உள்ள டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5 ம் தேதிஅந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால், டுவிட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் ஊழியர்களின் பெரும்பாலானோரை இந்த வாரத்தில் பணி நீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மெட்டா நிறுவன ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.