ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 227 ரன்கள் எடுத்து இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி விழ்த்தியுள்ளது
ஆஸ்திரேலியாவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும், ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காயில் இன்று நடைபெற்றது
இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டி செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதைத் தொடர்ந்து, இந்திய வீராங்கனை யஸ்திகா பாடியா 51 பாலில் 35 ரன்கள் எடுத்தார்.இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிதாலி ராஜ் 109 பாலுக்கு 61 ரன்கள் குவித்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய வீராங்கனைகள் 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்னர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 93 ரன்களில் அவுட்ட நிலையில் அடுத்து வந்த அலிசா ஹீலி 77 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த மெக் லேனிங் 53 ரன் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.