சென்னை செளகாா்பேட்டை பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தனியாா் கட்டடம் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக்கொண்டனா். இதில், முதாட்டி ஒருவர் சம்பவ இடத்துலேயே உயிரிழக்க, படுகாயமடைந்த 3 போ் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பூக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.