8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் குரூப்-1 பிரிவில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்த எந்த போட்டியிலும் வெற்றி பெறாத அணியாக ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. எனவே, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்ப தீவிரமாக முயற்சிக்கும். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் பயணிக்கிறது. ரன் ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த அணி ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.