சென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழைநீர் தேங்கிய இடங்களில் இதுவரை 95% தண்ணீர் வெளியேற்றப்பட்டு சீர்செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கழிவுகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளோம். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை என்ற அவர், எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும், எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய அரசுக்கு பயந்து பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.