தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழா கடந்த 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆலயத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அங்கு ஆன்மீக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பரதம் மற்றும் பல்வேறு கருத்தரங்கம் நடைபெற்ற இருக்கிறது. இதையொட்டி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. விழாவின் முக்கிய நாளான இன்று பல்வேறு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு ராஜ ராஜ சோழன் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.