8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. சிட்னி நகரில் நடக்கும் இன்றைய போட்டியில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.