தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷாம், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாகும் இந்த திரைப்படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.