தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்றுள்ளார். முன்னதாக, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே திமுக அரசுக்கும் அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் அவரது திடீர் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.