சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா ரயில்வே மேம்பாலத்தின் கீழே நேற்று மதியம் மாநகரப் பேருந்து ஒன்று சிக்கியது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அதன் பின்பு பேருந்து மீட்கப்பட்டது. பின்பு அந்த சுரங்கப் பாதை வழியாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை முதல் மின் மோட்டார்கள் மூலம் சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டு தற்போது மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.