உலகம் முழுவதும் கிருஸ்துவர்கள் தங்களுடைய குடும்பங்களில் இறந்தவர்கள், உறவினர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இதேநாளில் அனைத்து ஆன்மாக்கள் நினைவு தினம் என்ற கல்லறை தினத்தை அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இறந்தவர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து மலர்வளையம், மெழுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். அதேபோல, உயிரிழந்தவர்களுக்கு பிடித்த உணவுப்பொருட்களை படைத்து பிரார்த்தனை செய்தனர்.