தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அழகு நிலையத்தில் தன்னுடைய முடியை திருத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது, அழகு நிலைய ஊழியர், அந்த வாடிக்கையாளர் பெண்ணிடம் முடி திருத்தம் செய்ய முதலில் முடியை அலச வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி, முடியை அலசும் போது அந்த பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அழகு நிலைய ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அந்த பெண்ணுக்கு கழுத்தை பின் பக்கம் வளைத்து அழுத்தம் தந்ததால், மூளைக்கு ரத்தம் செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் (ஸ்ட்ரோக்) வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.