ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வரும் ஜாய் கே மேத்யூ மற்றும் ஜாக்குலின் தம்பதியரின் மகள்கள் தெரசா மற்றும் ஆக்னஸ்.தெரசா குற்ற உளவியல் துறை எடுத்து (criminal psychology ) படித்து வருகிறார்.ஆக்னஸ் 12 வகுப்பு படித்து வருவதோடு ,ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.இந்த இரு மாணவிகள் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ள, 193 நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடி உலக சாதனை படைக்க உள்ளனர்.உலக அமைதி தினமான வரும் 21 ஆம் தேதி காலை ஜான்ஸ் கதீட்ரல் ஹாலில் 9.30 மணிக்கு தொடங்கும் இவர்களுடைய இந்த நிகழ்வு தொடர்ந்து ஆறுமணி நேரம் நடைபெறுகிறது. ஐக்கிய நாடுகளின் தேசத்திற்கு வணக்கம்’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் நிகழ்வில் இந்த சாதனையை படைக்க உள்ளனர். ஜப்பானின் பழமையான மற்றும் மிகச்சிறிய தேசிய கீதத்தில் இருந்து 2012 -ல் வெளியிடப்பட்ட தெற்கு சூடானின் தேசிய கீதம் வரை அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.
இதில் அல்ஜீரியா தேசிய கீதம் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கின்ற இந்தப் பாடலை கவிஞர் முப்தி ஜகாரியா ( Moufdi Zakaria ) பாடிவிட்டு தனது கை விரலை வெட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோன்று தேசிய கீதங்களில் இஸ்ரேல் தேசிய கீதம் அமைதியை போதிப்பதாக இருக்கிறது. இந்த சாதனை நிகழ்வு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் மற்றும் உலக சாதனை குழுவைச் சேர்ந்த ஜுரி உறுப்பினர்கள் முன்னிலையில் இது நடைபெறுகிறது. இது குறித்து பேசிய அந்த மாணவிகள்,”இத்தனை தேசிய கீதங்களை பாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி.அனைத்து தேசிய கீதங்களும் பாராட்டுக்குரியவை.