தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, ஆளுநர் மாற்றப்பட்டதுக்கு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே திமுக அரசுக்கும் அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.