பிரேசில் நாட்டில் அதிபா் தோ்தல் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபரான வலதுசாரி தலைவர் ஜெயிா் பொல்சொனாரோ, இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் அதிபா் லூலா டி சில்வா உள்பட 11 போ் போட்டியிட்டனா். இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா். இந்த நிலையில், பிரேசில் அரசமைப்புச் சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு போட்டியிடுவோர் வாக்குகள் பெறாத பட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்கள் இரண்டாம் சுற்று தோ்தலில் போட்டியிடுவா். அதன்படி, நேற்று நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில் லூலா 50 சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். இதன்மூலம் இடதுசாரி கட்சியின் தலைவர் லூலா டி சில்வா மூன்றாவது முறையாக அந்த நாட்டின் அதிபரானார். லூலாவுக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.