சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் 147ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கர் மரியாதை செலுத்தினர். அதேபோல், குஜராத் மாநிலத்தில் உள்ள படேலின் சிலைக்கு பிரதமர் மோடியும், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் உள்ளிட்டோர், வல்லபாய் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.