ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தனது 61ஆவது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே, நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் துணிவு திரைப்படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் ஹீரோக்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.