தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இன்ஜினில் திடீரென தீப்பொறி பறந்தது. இதையடுத்து, டெல்லிக்கு மீண்டும் விமானம் அவசரமாக திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. விமானியின் துரித நடவடிக்கையால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 184 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால், டெல்லி விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விமானம் தீப்பற்றியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.