தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்ற ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை – திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நர்மதா உதய்குமாரைத் திருமணம் செய்துகொண்டார் ஹரிஷ் கல்யாண். இதையடுத்து திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 2010ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஹரிஷ் பியார் பிரேமா காதல் படம் மூலம் இளைஞர்களின் இதயங்களில் இடம் பிடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்ற இவர், தற்போது நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.