8ஆவது டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டி ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா – நெதர்லாந்து அணியையும், தென்னாப்பிரிக்கா-வங்கதேசம் அணியையும், பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொள்கிறது. இதில், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வீரர் பேட்டர் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் சதமடித்து, இந்த தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.