அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியின் மாநில பிரதிநிதிகளான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில கமிட்டிகளின் முன்னாள் தலைவர்கள் என 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் என மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று எண்ணப்பட்டன. அவற்றுள், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 416 வாக்குகள் செல்லாதது என்று தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்துள்ளார். இதன்மூலம், மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகினார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மல்லிகார்ஜூன கார்கே இன்று தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.