மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் அரசியல் அமைப்பு ஒன்றின் ஆண்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் இருந்த ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அந்த நாட்டு ராணுவம் ஆட்சியை கலைத்தது. இதைத்தொடர்ந்து, ஆங் சான் சூகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.