தீபாவளி பண்டிகையையொட்டி நேற்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால், சென்னையில் காற்றில் நுண்துகள்களின் (PM2.5)அளவு 109 என்ற பாதுகாப்பான நிலையில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவீட்டின்படி 192 என்ற மோசமான நிலைக்கு காற்றின் தரம் குறைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மணலி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரி, எண்ணூர், ராயபுரம், பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் காற்றின் தரம் அதிகளவு மாசு அடைந்துள்ளதாகவும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.